அரசியலுக்கு வந்த ஐஐஎம் பேராசிரியர்!

இந்தியாவில் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. ஐஐஎம்களில் படித்து முடித்து வெளிநாட்டு வேலைக்கு சென்ற பலர் தற்போது மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும, தங்களுடைய படிப்பை நாட்டு மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் செலவழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தான் ராஜீவ் கெளடா. பெங்களூர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை மட்டும் முதுகலை பட்டம் வாங்கிய இவர் 1992ல் நியூயார்க்கில் உள்ள பார்தம் பல்கலைக்கழகத்தில் மக்கள் கோட்பாடு மற்றும் நிர்வாகத்தி்ல் டாக்டர் பட்டம் பெற்றார். தற்போது இவர் பெங்களூர் ஐஐஎம்ல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கர்நாடகாவில் சுற்றுப்புற சூழலில் நிலைமை, கோலார் தங்க வயலை மறுசீரமைப்பது, கர்நாடகத்தில் மின்சார துறையில் மறுமலர்ச்சி காண்பது, மாநிலத்தில் ஊரக வளர்ச்சியில் முன்னேற்றம் காண்பது போன்ற திட்டங்களுக்கு ஆலோசகராக இருந்தார். அமெரிக்க-இந்திய அமைப்புகள் பலவற்றில் உறுப்பினராக இருக்கும் இவர் இயற்கை சீற்றங்களின் போது பல இடங்களில் இருந்தும் மக்களுக்கு நிதி திரட்டி தந்தார்.
பெங்களூர் நகரின் வளர்ச்சியை முக்கியமாக கருதி செயல்பட்டு வரும் அவர் கூறுகையில், நான் சிறு வயதில் வாழ்ந்த பெங்களூருக்கும் தற்போதைய பெங்களூர்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஜவஹர்லால் நேரு அவர்கள் பெங்களூர் இந்தியாவின் எதிர்கால நகரம் என்றார். இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்காக மாறியுள்ள பெங்களூர் அவரது கூற்றை மெய்பித்துள்ளது.
பெங்களூரின் வளர்ச்சிக்கு சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகள் விளையாட பூங்காக்களை நிறுவுதல், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையில் மரங்கள் வளர்த்தல் ஆகியவற்றிலும் ஆர்வம் காட்ட வேண்டும். பெங்களூர் பழமையும், புதுமையும் கலந்ததாக இருக்க வேண்டும்.
மாறி வரும் உலக சூழ்நிலைக்கு இந்திய கல்வி நிறுவனங்களும் மாற்றப்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பு, அரசியலில் நேர்மை ஆகியவை மிகவும் முக்கியம். இதை மக்களுக்கு தர வேண்டும் என்பதற்காகவே காங்கிரசில் இணைந்துள்ளேன். இந்த பயணத்தில் நான் மட்டும் தனியே செல்ல முடியாது. நீங்களும் என்னோடு வாருங்கள் என்கிறார் ராஜீவ் கெளடா.
ரிசர்ஜன்ட்இந்தியா என்ற என்ஜிஓ அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் உதவுவது மற்றும் அவர்களிடம் தலைமை பண்பை வளர்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். பெங்களூர் யுனைட்ஸ் என்ற அமைப்பின் மூலம் காந்திய வழியில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை ஒழிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
-
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications