நல்ல முடிவை எடுப்பார் விஜயகாந்த் - தங்கபாலு நம்பிக்கை
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை எடுப்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
ராமதாஸை சந்திக்கவில்லை ..
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசினார் தங்கபாலு. அப்போது அவர் கூறுகையில்,
கேள்வி: டாக்டர் ராமதாசை நீங்கள் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
பதில்: இல்லை. சந்திக்கவில்லை. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு மிக வேண்டியவர். காங்கிரஸ் கட்சி மீது பற்று கொண்டவர். பா.ம.க. தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் நீடிக்கிறது. தோழமைக் கட்சித் தலைவர்களை சந்திப்பது ஒன்றும் புதிது அல்ல. தேவைப்படும் நேரத்தில் சந்திப்போம்.
கேள்வி: டெல்லியில் தே.மு.தி.க. நிர்வாகிகளை சந்தித்தீர்களே?
பதில்: அவர்கள் எங்களுடைய நண்பர்கள். அவர்களை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.
கேள்வி: விஜயகாந்த், மக்களுடன் தான் கூட்டணி என்று கூறியிருக்கிறார். அவரை காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தோல்வியடைந்துவிட்டதா?
பதில்: ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தான் விரும்புகின்றவற்றை சொல்ல உரிமை உள்ளது. மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பது சோனியாகாந்தி தலைமையில்தான் முடியும். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஒருங்கிணைந்து வருவார்கள். அதுவரை பொறுத்திருங்கள்.
சோனியா காந்தியின் தலைமையை ஏற்கிறவர்களை ஏற்கிறோம். தேசியம், மதச்சார்பின்மையில் நம்பிக்கையுடையவர்களை வரவேற்பது எங்கள் இயல்பு. இன்றைக்கும் அழைக்கிறோம். அதில் சந்தேகம் இல்லை. விஜயகாந்த் தேசிய தோழர். தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
சோனியா சொல்வதே வேதம்...
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறதா?
பதில்: காங்கிரஸ் கூட்டணியில் யார் இருப்பார்கள்? என்பதை பற்றி சோனியாகாந்தி முடிவெடுப்பார். அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். அவர் சொல்வதுதான் சட்டம், வேதம்.
கேள்வி: தமிழ்நாட்டில் தொகுதிப்பங்கீடு எந்த அளவுக்கு உள்ளது?
பதில்: தொகுதிப் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. பீகார் வேறு, தமிழகம் வேறு. தமிழகத்தில் கூட்டணி பலமாக உள்ளது என்றார் தங்கபாலு.
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருவதையே தங்கபாலுவின் பேச்சு காட்டுகிறது.
முன்னதாக, இலங்கை தமிழர்களுக்காக காஞ்சீபுரம், தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
இந்த பொருட்களை காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் நேரில் வழங்கினர்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications