80 வயது கணவருடன் இணைந்த 23 வயது மனைவி!
சிவகங்கை: சிவகங்கை அருகே தனது 80 வயது கணவருடன் தான் வாழ தயாராக இருப்பதாக 23 வயது பெண் கூறியதை அடுத்து, அவர்களை போலீஸார் சேர்த்து வைத்து, திருமணத்தையும் பதிவு செய்ய உதவினர்.
சிவகங்கை மாவட்டம், சாளூரைச் சேர்ந்தவர் இளநீர் வியாபாரி கருப்பையா (80). இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.
வயதான காலத்தில் தனிமையில் வாடி வந்த கருப்பையா, உதவிக்காக வேண்டி, மேலூர் அருகே உள்ள கீழையூரில் வசிக்கும் பாண்டிச்செல்வி என்ற 23 வயதுப் பெண்ணை, 15 பவுன் நகைகளைப் போட்டுக் கொடுத்து சில நாட்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் கருப்பையாவின் பிள்ளைகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வயதில் இப்படி ஒரு கல்யாணம் தேவையா என்று கூறிய அவர்கள், ஊரைக் கூட்டி முதியவரையும், அவரது இளம் மனைவியையும் பிரித்து விட்டனர்.
இதனால் மன வருத்தம் அடைந்தார் கருப்பையா. பின்னர் பாண்டிச்செல்விக்கு தான் போட்ட நகைகளை திரும்ப வாங்கித் தருமாறு போலீஸை அணுகினார்.
மேலூர் போலீஸார் நடந்ததைக் கேட்டு கருப்பையா, பாண்டிச் செல்வி இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, நகைகளை திருப்பித் தர முடியாது. எனது கணவராகி விட்டார் கருப்பையா. எனவே அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் இருவரையும் சேர்த்து வைத்தனர். மேலும்,, அவர்களது திருமணமும், மேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications