இலங்கை அகதிகள் காவல் நிலைய முற்றுகை
பழனி: பழனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இலங்கை அகதிகள் திடீர் போராட்டம் நடத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், புளியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் ராஜசேகரன் என்பவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், அகதிகள் முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த விபத்துக்கு காரணமான காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் இருந்து டேப் உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்று கார் உரிமையாளர் தனபால் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்குமாறு 100க்கும் மேற்பட்ட அகதிகள் கீரனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் இழிவாக திட்டியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இனால் பெண்களை இழிவாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பழனி - தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பழனி தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications