போலி மது விற்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

Subscribe to Oneindia Tamil

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி மது விற்பனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்ட போலீசார் குழித்துறையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த ஒருவரை போலீசார் நிறத்தி விசாரித்தனர். ஆனால், பைக்கில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.

இதையடுத்து போலீசார் பைக்கை சோதனை செய்தனர். அப்போது 10 பாட்டில் மது இருப்பதும், அவை அனைத்தும் போலி மது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் மேலும் விசாரித்த போலீசார், அவர் குழித்துறை அருகே திரித்துவபுரம் கருமாவிலையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் என்பதை அறிந்து கொண்டனர். இதை தொடர்ந்து அவரது வீட்டிலும் போலி மது இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது சொகுசு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 பாட்டில் போலி மது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போலி மது, சொகுசு கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலி மது பாட்டில் ராணுவ கேன்டினில் வழங்கப்படும் பாட்டில் போன்று பிளாஸ்டிக்கில் தாயரிக்கப்பட்டு, டிரிபிள் எக்ஸ் ரம் என்று பெயரிடப்பட்டிருந்தது. மேலும் அதில் ராணுவ வீரர் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் ஓட்டப்பட்டிருந்தது. ஆனால் எங்கு தாயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

பாட்டிலை திறந்து பார்த்தபோது சாராயம் கலந்த தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

சமீபகாலமாக மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் போலி மது பாட்டில்கள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் இப்பகுதிகளில் போலி மது தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+