'ஜகா' வாங்கும் ராதிகா!-தேர்தலில் போட்டியில்லை!!
சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா மறுத்துவிட்டார் என்று தெரிகிறது.
பாஜக கூட்டணியில் உள்ள தனது கட்சியின் சார்பில் சிவகங்கையில் ராதிகா போட்டியிடுவார் என சரத்குமார் அறிவித்திருந்தார்.
ஆனால், இப்போது தேர்தலில் ராதிகா போட்டியிட மாட்டார் எனத் தெரியவருகிறது.
அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், திருமங்கலம் இடைத் தேர்தலில் வெறும் 800 ஓட்டு வாங்கியதில் இருந்து ராதிகாவுக்கு தனது கட்சி மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதற்கிடையே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று மதுரையில் சரத்குமார் விருப்ப மனுக்களை வாங்குகிறார்.
இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் பரிசீலனை முடிந்து வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடுகிறார்.
முன்னதாக ராதிகாவை சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கையில் நிறுத்தலாம் என பாஜக சொன்ன யோசனையை ஏற்று அதை அறிவித்தார் சரத்குமார். ஆனால், ராதிகா இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications