மன்மோகன் ஒரு ஜென்டில்மேன்-ராகுல் காந்தி
புதுச்சேரி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வந்தார்.
டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் ராகுல் காந்தி பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதலில் காரைக்காலுக்கு வந்தார். அங்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் புதுச்சேரி சென்றார்.
உப்பளம் துறைமுக வளாகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் அவர் புனித அந்தோணியார் சமுதாய நலக்கூடத்திற்குச் சென்ற அவர் அங்கு பெண்களை சந்தித்து உரையாடினார்.
பின்னர் ஆனந்தா திருமண நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் வருண் காந்தியின் பேச்சு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது,
வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு. ஆனால், யாருக்கும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும் பேச விரும்பவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் சொல்வேன். வருணின் பேச்சு எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. பிரதமர் மன்மோகன் சி்ங் பாஜகவினர் கூறுவது போல பலவீமானவர் அல்ல. இந்த நாட்டுக்கு நிறைய நல்லது செய்த மனிதர். அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி. மிகச் சிறந்த ஜென்டில்மேன். அப்படிப்பட்ட நபர்களைப் பார்ப்பதே அரிது. அவரது நடவடிக்கைகளே அவரது தரத்துக்கு எடுத்துக்காட்டு.
அதே நேரத்தில் பெரியவர்கள் குறித்து நான் தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை. நான் ரொம்ப சிறியவன் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications