அதிமுகவில் தொடரும் தொகுதிப் பங்கீட்டு சிக்கல்
சென்னை: அதிமுக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு இன்னும் சுமூகமாக முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏகப்பட்ட தொகுதிகளைக் கேட்பதாலும், பாமகவுக்கு முக்கிய தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருப்பாதலும் அங்கும் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
தற்போதைய நிலையில் அதிமுகவில்தான் நிறைய முக்கிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் சில குட்டிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாமகவும் சேரப் போகிறது.
இந்த நிலையில் தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரித்துத் தருவதில் சிக்கல் நீடிக்கிறதாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளைக் கேட்டுள்ளதாம். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 கேட்டுள்ளது. மதிமுக தரப்பில் 5 தொகுதிகளைக் கேட்டுள்ளனர்.
இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 3 தொகுதிகள் வரை கிடைக்கலாம்.
இந்த நிலையில், வடசென்னை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய 5 தொகுதிகளையும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்கின்றன. ஆனால் கோவை, திருப்பூர், தென்காசி தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட விரும்புகிறதாம்.
அதேபோல பாமக தங்களுக்கு சிதம்பரம் வேண்டாம் என்று கூறுகின்றனராம். அத்தொகுதியில் திருமாவளவன் போட்டியிடவிருப்பதால் அங்கு தாங்கள் நிற்பதைத் தவிர்க்க விரும்புகிறது பாமக.
கூட்டணி வெற்றிகரமாக அமைந்தும் கூட தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் சிக்கல் நீடிப்பதால் அதிமுக கூட்டணியும் இன்னும் இறுதி வடிவம் பெற முடியாமல் தவிக்கிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications