எஸ்எஸ்எல்சி தேர்வுகள்-8.4 லட்சம் எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,42,350 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வெழுதுகின்றனர். இதில் தனித் தேர்வர்கள் 50,000 பேர்.
காலால் எழுதிய மாணவி:
திருக்கோவிலூரில் இரு கைகளையும் இழந்த மாணவி ஒருவர் காலால் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினார்.
அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகளான வித்யஸ்ரீக்கு பிறவியிலேயே 2 கைகளும் இல்லை. ஆனாலும் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் வளர்ந்த இவர் இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுத பயிற்சி பெற்றார்.
பின்னர் தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். எஸ்எஸ்எல்சி தேர்வை காலால் எழுதினார். இதைக் கண்ட பல மாணவிகள் கண் கலங்கினர்.
மாணவி வித்யஸ்ரீக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி கல்வித்துறையினரும் தங்களது கடமையை முழுமையாகச் செய்தனர்.
பெண் என்றாலே சுமை தான் என நினைக்கும் இந்த காலத்தில் என்னை எனது பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துடன் படிக்க வைக்கின்றனர். எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்கிறார் வித்யஸ்ரீ.
தேர்வெழுதிய கைதிகள்:
இந்தத் தேர்வை சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள 59 கைதிகளும் எழுதினர். இதற்காக சிறையில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைதிகள் தேர்வெழுதியபோது தமிழக சிறைத்துறை டிஐஜி ஆர்.நடராஜ் அதை பார்வையிட்டார்.
தேர்வு எழுதியவர்களில் 80 சதவீதம் பேர் ஆயுள் தண்டனை கைதிகள்.
ஆள் மாறாட்டம்-கைது:
மதுரை அரசு தேர்வு துறை மண்டல அலுவலகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் திருமங்கலத்தில் உள்ள பள்ளியில் ஒரு மாணவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி விஷ்ணுபிரசாத் தலைமையில் பறக்கும் படையினர் சென்று சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எஸ்எஸ்எல்சி தனித்தேர்வு மாணவர் ஆர்.வினோத் என்பவருக்கு பதிலாக அவரது உறவினர் விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் பி.சுந்தர் தேர்வு எழுதியது தெரியவந்தது. அனுமதி சீட்டிலும் தனது புகைப்படத்தை போலியாக ஒட்டி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பிடிபட்ட மாணவர் சுந்தரை கல்வி அதிகாரிகள் திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் சுந்தரை கைது செய்தனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications