போலி டிடி: ரூ. 40 கோடி மோசடி-காண்ட்ராக்டர் கைது
சென்னை: போலியான டிமான்ட் டிராப்டுகளை கொடுத்து ரூ. 40 கோடி பணத்தை மோசடி செய்த மும்பையைச் சேர்ந்த கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கில், சொத்துக்கள் ஏலம் விடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஏலம் எடுக்க மும்பையை சேர்ந்த காண்ட்ராக்டர் அன்சாரி முகமது அசன், பெங்களூரை சேர்ந்த ஷெரீப் மற்றும் ராஜசேகர் ஆகிய 3 காண்ட்ராக்டர்கள் டெண்டர் கேட்டிருந்தனர்.
இதற்காக 3 பேரும் தலா ரூ. 13 கோடியே 25 லட்சத்துக்கு டிடி கொடுத்திருந்தனர். ஆனால் திடீரென தாங்கள் டெண்டரிலிருந்து வாபஸ் பெறுவதாகவும், கொடுத்த டிராப்டுகளை திரும்பத் தருமாறும் கோரினர். ஆனால் இதை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் மூன்று பேரும் கொடுத்த டிராப்டுகள் வங்கியில் போடப்பட்டபோது அவை போலியானவை என்று தெரிய வந்தது. 3 பேரும் சேர்ந்து ரூ.39 கோடியே 75 லட்சத்துக்கு போலி டிமாண்ட் டிராப்ட் கொடுத்து உயர்நீதிமன்றத்தை ஏமாற்றி மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து 3 பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனலர் மாலா போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற காவல் நிலையத்திற்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய உயர்நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதைடுத்து அன்சாரி முகம்மது அசன் போலீஸில் சரணடைந்தார். அவரைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மற்ற இருவரும் சரணடையவில்லை. அவர்களைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications