ஜெ. பிரதமரா?-நாடு தாங்காது: இளங்கோவன்
ஈரோடு: சட்டையை மாற்றுவது போல் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி வரும் பாமகவின் அரசியல் வியாபாரம் எத்தனை நாளைக்கு லாபகரமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டையை மாற்றுவது போல் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி வருகிறது பாமக. தற்போது அவர்கள் அணி மாறியதும் எதிர்பார்த்ததுதான்.
மந்திரி பதவியல் இருந்து அன்புமணி ராஜினாமா செய்த பிறகு கூட்டணி மாறும் முடிவை சொல்லியிருந்தால் சற்று நாகரீகமாக இருந்திருக்கும். பாமகவின் வியாபாரம் எத்தனை நாளைக்கு லாபகரமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
திருமாவளவன் கூட்டணியில் இருப்பாரா, இல்லையா என்பதை எங்கள் தலைவி சோனியாவும், முதல்வர் கருணாநிதியும் அறிவிப்பார்கள். விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி விட்டார். காங்கிரசுடன் சேராததால் இழப்பு யாருக்கு என்பதை மக்கள் அவருக்கு தெளிவுபடுத்துவார்கள்.
மூன்றாவது அணியின் வெற்றி பூஜ்யம்தான். ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் பிரதமர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டால் நாடு தாங்காது.
மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தால் மக்கள் பயனடைந்தள்ளனர். திமுக அரசின் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி, இலவச சமையல் கேஸ் அடுப்பு திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள் இறக்குவதை எதிர்த்து தங்கபாலு உண்ணாவிரதம் இருந்தது சரியல்ல. தேர்தலுக்கு பிறகு கள் மீதான தடையை நீக்குவது குறித்து முதல்வருடன் பேசுவோம் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications