திமுக கூட்டணி-மனித நேய கட்சிக்கு 2 தொகுதி?
சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீடு விஷயத்தில் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார்.
ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோர் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினர்.
பின்னர் ஜவாஹிருல்லாஹ் கூறுகையில், 'லோக்சபாத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்க மாட்டோம். எங்களது கோரிக்கையைக் கேட்ட முதல்வர் அதை கனிவுடன் பரிசீலிப்பதாகக் கூறினார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்றார்.
இந்தக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. ஆனால், 4 தொகுதிகளை இக் கட்சி கோருகிறது. இதையடுத்து 2 தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications