பிலிப்பைன்ஸ்: தீவிரவாதிகள்-ராணுவம் மோதல், 27 பேர் பலி
மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே திடீர் மோதல் மூண்டது. இதில் 20 தீவிரவாதிகளும், 7 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பிராந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் போன்ஸ் கூறுகையில், பியலாங் என்ற கிராமத்தில், தடை செய்யப்பட்ட மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி தீவிரவாத அமைப்பைச் சேர்நத் தீவிரவாதிகள் அணி சேருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு ராணுவத்தின் 601வது பிரிவு வீரர்கள் சென்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் மூண்டது.
எட்டு மணி நேரம் நடந்த சண்டையில் 20 தீவிரவாதிகளும், 7 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதத் தலைவர் உம்ப்ரா கடோ தலைமையிலான தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே இந்த ஆண்டு நடந்த மிகப் பெரிய சண்டை இதுவாகும்.
அதேபோல, மமசாபனோ என்ற இடத்தில் நடந்த இன்னொரு சண்டையில் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர்.
கடோ மற்றும் அவருடன் உள்ள தீவிரவாத தலைவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தி நாட்டை ரத்தக்களறியாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதை ராணுவம் முறியடிக்கும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications