அதிமுக 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 22 தொகுதியில் போட்டியிடும் எனத் தெரிகிறது. மதிமுக 5 தொகுதிகளிலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. ஏற்கனவே பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்து விட்டன. திமுக கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை கருணாநிதி நேற்று இரவு அறிவித்தார்.
அதேபோல அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக பாமகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான சீட்கள் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் அவற்றுக்கான உடன்பாடு முடிவாகி விட்டதாக தற்போது கூறப்படுகிறது. அதன்படி அதிமுக 22 தொகுதிகளில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. மதிமுகவுக்கு 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளனவாம்.
திருவள்ளூர், மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
விருதுநகர், ஆரணி, தூத்துக்குடி, திருச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடலாம்.
வட சென்னை, தென்காசி நாகப்பட்டினம் ஆகியவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகியவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்படலாம்.
ஏற்கனவே பாமக ஸ்ரீபெரும்பதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், தருமபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் இவற்றை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications