Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருங்கால பிரதமரை தேமுதிக அடையாளம் காட்டும்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
செங்கோட்டை: அடுத்த பிரதமர் யார் என்பதை தேமுதிக அடையாளம் காட்டும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.

திருநெல்வேலி மேற்கு மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

செங்கோட்டை காந்தி சிலை முன்பு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது ..

இன்று டெல்லி செங்கோட்டையில் நடக்கும் தேர்தலுக்கும், இந்த செங்கோட்டைக்கும் தொடர்பு உண்டு. டெல்லி செங்கோட்டைக்கு செல்ல யாரை தேர்ந்தெடுக்கீறர்களோ அவரே இந்த நாட்டின் பிரதமரை தேர்வு செய்வார்.

அவரை அடையாளம் காட்டக் கூடியது இந்த செங்கோட்டை.. தேமுதிக வெற்றி பெற்றால் பிரதமர் யார் என்பதை அடையாளம் காட்டிட வாய்ப்பு அமையும். இங்கு இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சியை நடத்துகின்றனர். இன்னொரு கட்சியான அதி்முக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கின்றது. காரணம் 5 வருடம் ஆட்சியில்லாமல் கொள்ளையடிக்க வழியில்லை.

தொண்டர்கள் பற்றி யார் கவலைப்படுகிறார்கள். அவர்கள் ஆட்சியை காப்பாற்ற கூட்டணியை தேடி அலைகிறார்கள்.

நான் மக்களோடுதான் கூட்டணி. மக்களே அவர்களுக்கு ஓட்டு போட்டு உட்கார வைத்தீர்கள். படித்து பட்டம் வாஙகி வங்களில் கடன் வசதி என்றனர். யார் வங்கி கடன் வாங்கியது. ஓருத்தரும் இல்லையே... (மக்களும் இல்லை..இல்லை என்றனர்). பின் ஏன் நீங்கள் ஓட்டு மட்டும் போடுகீறேர்கள்.

இலங்கையில் தினமும் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற முயற்சி எடுத்தார்களா...கலைஞர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாராம்.. அந்த கடிதம் மூலம் இலங்கை தமிழர்களை கப்பாற்ற பிரதமர் நடவடிக்கை எடுப்பாராம். மக்களை காப்பாற்ற நடவடிக்கை உண்டா...

இராமேஸ்வரம் மீனவர்களை காப்பாற்றுவார்களா.. விவசாயிகள் காவேறு, முல்லை பெரியாறு, பாலாறு அணை தண்ணீரை பெற முடியாமல் 3 புறமும் தவிக்கிறார்களே அந்த பிரச்சனையை தீர்த்தார்களா...

நெல்லை மாவட்டத்தில் தொழிற்சாலை உண்டா....தென்காசியில் ஜாதி கலவரம் தூண்டுதல், நெல், கரும்புக்கு விலை உயர்வு உண்டா...மற்ற பொருட்கள் விலை உயர்ந்தும் பயனில்லையே... அனைவருக்கும் கல்வி என்றார்கள்...

ஏழை பொதுமக்கள் நகை, நட்டுகளை விற்றும், கடன் வாங்கியும் தங்கள் வாரிசுகள் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர் கனவில் இருந்தனர். படித்து முடித்ததும் வேலை கிடைத்ததா...வேலை. வேலை என்பது காதில் மட்டுமே கேட்க முடிந்தது... இல்லை இல்லை என்று அதற்கு பதில் இலவச கலர் டிவி கொடுக்கிறோம் என்கிறார். இதனால் என்ன முன்னேற்றம் தொடர்ந்து விடுமுறை மட்டுமே இங்கு அனைத்து துறையிலும் இருந்து வருகிறது.

மின்சார துறைக்கும் அதே விடுமுறை அளித்த ஓரே அரசு இந்தஅரசுதான்.

ஜெயலலிதா, கலைஞர் ஆகிய 2 பேர் ஆட்சியிலும் மின்சாரத்திற்காக ஏதும் திட்டம் போடவில்லை. மணல் மூலம் லாபம் பார்க்க முதலில் ஜெயலலிதா பிள்ளையார் சுழி போட்டார். கலைஞர் அதையே பின்பற்றினார்.

தமிழ்நாட்டில் மதுபான கடைகள் முலம் லாபம் கண்டார் புரட்சி தலைவி ஜெயலலிதா. அதே வழியை கலைஞர் பின்பற்றினார்.

பிள்ளையார் மீது மட்டும் கலைஞர் நம்பிக்கை வைக்க மாட்டார். பிள்ளையார் சுழியான ஊ மற்றும் அவருக்கு பிடிக்கும். ஊ என்பது ஊழல் அல்லவா அதனால்தான்.

மக்களே சிந்தியுங்கள் விவசாய கடன் தள்ளுபடி என்றார்கள். அது யாருக்கு... ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு மட்டுமே... அவர்கள்தான் பலன் பெற்றனர். உண்மையான விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

50-40-20 வருடங்களாக கட்சி நடத்துபவர்கள் தனித்தனியாக தேர்தலை சந்திக்க தைரியம் இருக்கிறதா...காரணம் அவர்களிடம் மக்கள் பயன்பெறும் திட்டம் இல்லை.
மக்களே உங்களால் முடியாதது எதுவும் இல்லை.

ஆகவே இந்த தேர்தலில் உங்களால் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க முடியும். அவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்து தேமுதிக முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள். தென்காசியில் வேட்பாளரை நிறுத்தாமல் அவர்கள் கண்ணாமூச்சு ஆடுகிறார்கள். ஆனால் நான் அவர்களுக்கே கண்ணாமூ்ச்சு காட்டுவேன். விரைவில் வேட்பாளர் பெயரை அறிவிப்பேன் என்றார்.

மேலும் விஜயகாந்த் பிரச்சார வாகனத்திற்கு பின் அணிவகுதது வரும் வாகனங்களில் உளவுத்துறையின் வாகனம் இடையே ஊர்ந்து அவருக்கு கூடும் மக்கள் கூட்டத்தை ரகசியமாக கணக்கெடுப்பு நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. தென்காசி தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காமலேயே அவர் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பாவூர் சத்திரத்தில் ..

முன்னதாக நெல்லை டவுன், பழைய பேட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பின்னர் ஆலங்குளம் பஸ் நிலையம் அருகில் இருக்கும் காமராஜர் சிலை முன்பு பேசினார். தொடர்ந்து பாவூர்சத்திரம் மற்றும் மானூரில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது விஜயகாந்துக்கு மேளதாளம் முழுங்க கட்சியினர் உற்சாக வரேவேற்பு கொடுத்தனர்.

விஜயாகாந்த் பேசுகையில்,

சொன்ன சொல்லை காப்பற்றக்கூடியவன் நான். எனது கூட்டணி மக்களோடும், தெய்வத்தோடும்தான். எனக்கு கொள்கை கோட்பாடு இல்லை என்கிறார்கள். எனக்கா இல்லை... கொள்கை.

கோட்பாடைப் பற்றி சொல்கிறவர்கள் முதல் 5 வருடம் ஒரு கூட்டணியும், அடுத்த 5 வருடம் எதிர்கூட்டணியும் என்று கொள்கையை அடமானம் வைக்கின்றனர். நான் எனது கொள்கையில் எப்போதுமே உறுதியாக இருக்கிறேன்.

கடந்த தேர்தலின் போது மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் ஒரே கூட்டணி ஆட்சி அமைத்தால் மக்களுக்கு தேவையான திட்டங்களை எளிதாக நிறைவேற்றிவிடலாம் என்று கருணாநிதி கூறினார். ஆனால் உருப்படியான திட்டம் எதுவும் வந்தது மாதிரி தெரியவில்லை.

நீங்களும் கறுப்பு, நானும் கறுப்பு...

'தனித்திரு, விழித்திரு, பசித்திரு' என்பது வள்ளலார் வாக்கு. அதன்படி "தனித்தும், விழித்தும் பசித்தும்'' இருக்கிறேன். எனக்கு நீங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும்.

நீங்களும் கறுப்பு, நானும் கறுப்பு, நீங்களும் தமிழன், நானும் தமிழன் நாம் இப்படிதான் இருப்போம். நமது மனது வெள்ளையாக இருந்தால் போதும்.

நான் தெளிந்த நீரோடை...

40 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். இப்போது என்னை அரசியல் கோமாளி, அரசியல் தெரியாதவன் என்று விமர்சிக்கிறார்கள். நான் கோமாளி அல்ல, தெளிந்த நீரோடை. தெளிந்த நீரில் பாம்பு எது? மீன் எது? என்று கண்டுபிடித்து விடாலாம்.

ஆனால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குழம்பிய குட்டைகள். அதில் என்ன இருந்தாலும் தெரியாது. அவர்கள் குழம்பியது மட்டுமின்றி மக்களையும் குழப்பி வருகிறார்கள். எனவே நாட்டுக்கு யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை அறிந்து வாக்களியுங்கள்.

தனித்து போட்டி ஏன்...

நான் தெய்வத்தை நம்பி நின்றதால் எனக்கு நான் விரும்பிய முரசு சின்னத்தை கொடுத்துவிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். மைக்கேல் ராயப்பன் நிச்சயம் வெற்றி பெறுவார்.

கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் அனைத்து மத ஆலயங்களும் முரசு கொட்டிய பிறகு திறக்கப்படுகின்றன. அதே போல தேமுதிகவின் வெற்றிமுரசு கொட்டியபிறகு மக்களுக்கும் நல்ல விடிவு காலமும், நல்லவழியும் பிறக்கும்

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அது சுதந்திரமாக செயல்படவேண்டும். சுதந்திரமாக முடிவு எடுக்கவேண்டும். கூட்டணி அமைத்தால் நம்மால் சுதந்திரமாக செயல்பட முடியாது. நன்மைகள் செய்யமுடியாது. கூட்டணி கட்சிகளின் கருத்தை தான் சொல்ல வேண்டி இருக்கும்.

யாரிடமும் கேட்காமல் மக்களுக்கு நன்மை செய்வதற்காகவும் நாம் சுதந்திரமாக செயல்படுவதற்காகவும் தான் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். மத்திய-மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்தது. அதில் உண்மையான ஏழை விவசாயிகள் பயன் பெறவில்லை. அதிக அளவில் கடன் வாங்கிய கட்சிகாரர்கள் தான் பயன்பெற்றனர்.

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்...

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டை தேடிவரும் என்றேன். ஆனால் முடியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நாங்கள் விவசாயிகளின் விலை பொருட்களை வீடு தேடிவந்து கொள்முதல் செய்வோம் என்று கூறுகிறார்கள். இது சாத்தியம் என்றால் ரேஷன் பொருட்கள் வழங்குவதும் சாத்தியம்.

எனவே எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு அளியுங்கள். இரு கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து உள்ளீர்கள். இந்த முறை மாற்றி எனக்கு வாக்களியுங்கள். வெற்றி பெற்றபிறகு நான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், என்னை மறித்து நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். பிறகு எனக்கு நீங்கள் ஓட்டுப்போடக்கூடாது. அப்படிப்பட்ட தைரியம் மக்களிடம் வரவேண்டும்.

எனது கட்சியில் இருந்து தொண்டர்கள் யாரும் வெளியே செல்லவில்லை. வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் தான் வந்த வழியே சென்று உள்ளனர். இதனால் தேமுதிகவிற்கு எந்த சேதமும் கிடையாது என்றார் விஜயகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+