தென்காசி சீட்-காங்கிரசை சுற்றும் கிருஷ்ணசாமி!
தென்காசி: தென்காசி தொகுதியை தனது புதிய தமிழகம் கட்சிக்கு தருமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்திடம் கேட்க அக்கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி இருக்கிறது. கடந்த 1998ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கினார். 2004ல் நடந்த தேர்தலில் 1 லட்சத்து 86 ஆயிரம் ஓட்டுகள் பெற்று குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதிக அளவில் ஓட்டுக்களை பெற்ற போதிலும் ஒரு முறை கூட வெற்றிபெற முடியவில்லை. இதையடுத்து இம்முறை அதிமுக கூட்டணியில் சேர்ந்து தனி தொகுதியான தென்காசி வாங்கிவிடலாம் என எண்ணியிருந்தார்.
ஆனால், இவரது கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிமுக, தென்காசியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. இதையடுத்து கிருஷ்ணசாமியின் அதிமுக கூட்டணி கனவு முறிந்தது.
தற்போது அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான குலாம் நபி ஆசாத்தை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து சென்னையில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரை சந்திக்க முயற்சித்து வருகிறார்.
தென்காசி தொகுதிக்கு இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications