பயணிகள் மீது சந்தேகம்-நிறுத்தப்பட்ட விமானம்
டெல்லி: விமானத்தில் வந்த பயணிகள் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக டெல்லியிலிருந்து கொல்கத்தாவுக்கு கிளம்பிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. விசாரணையில் அந்த நபர்கள் பாதுகாப்பு படையினர் என்பது தெரியவந்ததை அடுத்து விமானம் மீண்டும் பறந்தது.
ஏர் இந்தியாவின் ஐசி 401 விமானம் நேற்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கொல்கத்தா நோக்கி கிளம்ப தயாராகி கொண்டிருந்தது. ரன்-வேயில் வேகமாக ஓடத் துவங்கியது.
அந்த விமானத்தில் வேலை முடிந்து சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு திரும்பி கொண்டிருந்த ஏர் இந்தியா விமான பணிப்பெண் ஒருவரும் இருந்தார். அவருக்கு தனது அருகில் அமர்ந்து இருந்த மூன்று பயணிகளின் நடவடிக்கையில் திடீரென சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர் பணியில் இருந்த விமானப் பணிப்பெண்கள் மூலம் விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவசரமாக செயல்பட்ட விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.
பின்னர் ரன்-வேயில் நகர்ந்து கொண்டிருந்த விமானம் நிறுத்தப்பட்டு
அந்து மூன்று பயணிகளிடமும் விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு படையினர் என்பதும், அவர்கள் பணி நிமித்தாக கொல்கத்தா சென்று பின்னர் அங்கிருந்து இம்பால் செல்ல இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் கொல்கத்தா சென்று சேர்ந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications