வீடு மீது தாக்குதல்-கஸாப் பெண் வக்கீல் விலகல்

Subscribe to Oneindia Tamil

Anjali Waghmare
மும்பை: தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கஸாப்புக்கு ஆதரவாக வாதாடுவதற்காக மும்பை கோர்ட்டால் நியமிக்கப்பட்ட பெண் வக்கீல் அஞ்சலி வாக்மேரின் வீட்டை சிலர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக அஞ்சலி தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதி கஸாப்புக்காக வாதாட புனேவைச் சேர்ந்த வக்கீல் அஞ்சலி வாக்மேரை மும்பை கோர்ட் நியமித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மும்பை ஒர்லி பகுதியில் உள்ள அஞ்சலியின் வீட்டுக்கு சிவசேனா கட்சியனர் கும்பலாக வந்து இந்த வழக்கில் அஞ்சலி ஆஜராகக் கூடாது என்று கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் அஞ்சலி வீட்டை கல்வீசித் தாக்கினர்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கல்வீசித் தாக்கிய 9 பேரை கைது செய்தனர். மற்றவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்த நிலையில் அஞ்சலி இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி தஹிலியானியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகள் கஸாப் மற்றும் இஸ்மாயில் ஆகியோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 57 வயது ஹரீஷ் சந்திரா ஸ்ரீவர்தாங்கர் என்பவருக்காகவும் ஒரு வழக்கில் ஆஜாராகிறார் அஞ்சலி.

கஸாப், இஸ்மாயில் ஆகியோர் காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியபோது, அரசு ஊழியரான ஸ்ரீவர்தாங்கரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இஸ்மாயில், அவரை சுட்டதோடு, தொண்டையில் துப்பாக்கியால் தாக்கி காயப்படுத்தினான்.

இதில் படுகாயமடைந்த ஸ்ரீவர்தாங்கருக்கு அரசு ரூ 50 ஆயிரம் இழப்பீடு கொடுத்தது. ஆனால் இது போதாது, கூடுதலாக தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் ஸ்ரீவர்தாங்கர். இதில் அஞ்சலிதான் வழக்கறிஞராக இருக்கிறார்.

எனவே இதையும் கருத்தில் கொண்டே அஞ்சலி விலகி விட்டதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+