பொறுப்பை தட்டிக் கழிக்கும் கருணாநிதி- நெடுமாறன்
சென்னை: தனி ஈழம் அமைய வேண்டும் என்பதில் தனக்கிருக்கும் பொறுப்பை தமிழக முதல்வர் தட்டி கழித்து வருகிறார் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழ் ஈழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட அதிக மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கை தமிழருக்காக கடந்த 50 ஆண்டுகளாக உழைத்து வருவதாக கூறும் அவருக்கு இலங்கை மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களர்கள் என்பது தெரியாதா. அங்கு தமிழர்கள் வெறும் 30 சதவீதம் பேர் தான் உள்ளதை அவர் மறந்துவிட்டாரா?
ஈழத் தமிழ் மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவதற்கு பதிலாக இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று சொல்வது பிரச்னையை வேண்டுமென்றே குழப்பும் நோக்கத்தில் அமைந்துள்ளது.
1977ம் ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை முன்வைக்கப்பட்டு பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் ஈழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.
சிங்கள கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தனி ஈழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டியது முதல்வர் கருணாநிதியின் பொறுப்பு. அதை தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் நெடுமாறன்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications