பாதுகாப்பு: அத்வானியுடன் ப.சிதம்பரம் ஆலோசனை
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மிரட்டல் குறித்து அவரை நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை இந்த சந்திப்பு நடந்தது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்படும் அதே அளவிலான பாதுகாப்புதான் அத்வானிக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அவர் துணைப் பிரதமராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உயர்த்தப்பட்டது. அன்று முதலே அவருக்கு அதி உயர்ந்த பாதுகாப்பு தரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தின்போது அத்வானி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைக் கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை சமீபத்தில் மத்திய அரசை எச்சரித்திருந்தது.
இதையடுத்து இருவருக்கும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அதி முக்கியமான 39 தலைவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிர பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் அத்வானியை, ப.சிதம்பரம் சந்தித்துள்ளார்.
இந்த அதி முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் சோனியா, அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங் தவிர ராகுல் காந்தி, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், மாயாவதி, ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, உமர் அமப்துல்லா, முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications