கோவையில் ரூ. 1 கோடி கடத்தல் பொருள் பறிமுதல்
கோவை: கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ 1 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு கடந்த 27ம் தேதி சில்க் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில் 9 பெரிய பெட்டிகளில் வீட்டு உபயோக பொருள் என முத்திரை பதிக்கப்பட்டிருந்த பொருட்கள் வந்து இறங்கின. அதில் மூன்று பேர்களின் பெயர் மற்றும் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெட்டி வந்த மறுநாள் ஒருவர் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு டெலிவரி ரசீதை வாங்கி கொண்டு, வண்டி பிடித்து வருவதாக கூறி தலைமறைவாகி விட்டார். பெட்டியை அங்கேயே விட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து விமான நிலைய போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அட்டை பெட்டியை ஸ்கேன் செயதனர். அப்போது அந்த பெட்டியில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அந்த பெட்டியை பிரித்து பார்த்தில் கேமரா, கைக்கடிகாரம் போன்றவை இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என தெரிகிறது.
எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சுங்க வரி கட்ட வேண்டும் என்பதால் அதை திருட்டுத்தனமாக வீட்டு உபயோக பொருட்கள் என கூறி கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அந்த பெட்டிகளில் இருந்த முகவரிக்ள் உண்மையா என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். டெலிவரி எடுக்க வந்த அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications