குழப்பத்தில் தமிழக-கேரள எல்லை பகுதி வாக்காளர்கள்
கோவை: தமிழக, கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் கேரள வாக்காளர்கள் தாங்கள் எங்கு போய் ஓட்டுப் போடுவது என்பது தெளிவாகத் தெரியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக- கேரள எல்லையோர கிராமங்களில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்களில் சிலருக்கு இருமாநில வாக்காளர் பட்டியலிலும் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
தற்போது கேரள மாநிலத்தின் வாக்காளர் சரிபார்ப்பு பணி கோவை அதிகாரிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் வாக்காளர் பட்டியல் மலையாள மொழியில் இருப்பதால் மலையாளம் தெரிந்த ஊழியர்களின் உதவி தேவைப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் வாளையார், ஆனைகட்டி, பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், வால்பாறை பக்கம் உள்ள மழுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களில் பலர் கேரள வாக்காளர் பட்டியலிலும், தமிழக வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த தேர்தலின்போது இதேபோன்று புகார் வந்தபோது இந்த குழப்பத்தை போக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் அப்போது 2 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் கேரளாவில் வருகிற 16-ம் தேதியும், தமிழ்நாட்டில் மே மாதம் 13-ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
எனவே 2 மாநிலங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள ஒரே வாக்காளர் 2 இடங்களிலும் ஓட்டு போட வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்தப் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த வாக்காளர்கள் மத்தியில் எங்கு ஓட்டு போடுவது? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்ய கோவை மாவட்ட எல்லையோர கிராமங்களின் வாக்காளர் பட்டியலோடு ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியில் கோவை, பொள்ளாச்சி கோட்டாட்சியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications