சிறையில் வருணை கொடுமைப்படுத்துகிறார்கள்-வெங்கையா நாயுடு
எடவா: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளம் தலைவர் வருண் காந்தி எடவா சிறையில் கொடுமை படுத்தப்படுவதாக அக்கட்சியின் துணைத் லைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக வருண் காந்தி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் அவரை கொல்ல நிழல் உலக தாதா சோட்டா ஷகீல் சதி திட்டம் தீட்டியது உளவுதுறையால் கண்டுபிடிக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தர பிரதேச அரசு அவரை பிலிபித் சிறையில் இருந்து எடாவா சிறைக்கு மாற்றியது.
இந்நிலையில் எடாவா சிறையில் வருணை சந்தித்த பின் வெங்கையா நாயுடு கூறுகையில்,
பிலிபித் சிறையில் இருந்து வருண் அனுமதி இல்லாமல் எடாவா சிறைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவரை மிக சிறிய அறையில் போட்டு அடைத்துள்ளனர். அங்கு அவரை யாரையும் பார்க்க முடியாமல் செய்துள்ளனர்.
அவர் மனிதாபிமானம் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளார். அவர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வருண் பேசிய சிடியில் இருப்பது அவரது குரலே கிடையாது. இதில் சதி நடந்துள்ளது. அவர் தவறாக எதுவும் பேசவில்லை. அவரை கொல்ல சதி நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார் வெங்கையா நாயுடு.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications