For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பகுஜன் சமாஜ் சார்பில் ராமநாதபுரத்தில் ஜான் பாண்டியன் மனைவி போட்டி

By Staff
Google Oneindia Tamil News

Priscilla Pandian
மதுரை: பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் தேவேந்திர குல வேளாளர் தலைவர் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன்.

பகுஜன் சமாஜ் கட்சியின் 24 வேட்பாளர்களை நேற்று மதுரையில் நடந்த கட்சியின் பிரசாரக் கூட்டத்தின்போது மாயாவதி அறிவித்தார்.

24 பேரில் மூன்று பேர் பிராமணர்கள், 3 பேர் முஸ்லீம்கள் ஆவர்.

வேட்பாளர்கள் விவரம்...

தென் சென்னை - ஸ்ரீதரன்.
மத்திய சென்னை - யூனிஸ் கான்.
ஸ்ரீபெரும்புதூர் - ராஜப்பா.
அரக்கோணம் - மேரி ஜான்.
வேலூர் - மன்சூர் அகமது.
சிதம்பரம் - என்.ஆர்.ராஜேந்திரன்.
தர்மபுரி - ஏ.வி. புருஷோத்தமன்.
ஆரணி - ஏ.சங்கர்.
கள்ளக்குறிச்சி - செந்தில்குமார்.
சேலம்- பாலசுப்ரமணியம்.
கோவை - ராமசுப்ரமணியம்.
கரூர் - தர்மலிங்கம்.
திருச்சி - என்.கல்யாண சுந்தரம்.
பெரம்பலூர் - செல்வராஜ்.
மயிலாடுதுறை - எல்.வி.சப்தரிஷி.
சிவகங்கை - எம்.ஜி. தேவர்.
தேனி - இளையராஜா.
தூத்துக்குடி - ஜீவன் குமார்.
கன்னியாகுமரி - ப.சிவகாமி.
மதுரை - தர்பார் ராஜா.
ராமநாதபுரம் - பிரிசில்லா பாண்டியன்.
திண்டுக்கல் - ஸ்ரீனிவாச பாபு.
விருதுநகர் - கனகராஜ்.

பிரிசில்லா பாண்டியன்...

இவர்களில் பிரிசில்லா பாண்டியன், ஜான் பாண்டியனின் மனைவி ஆவார். தற்போது சேலம் மத்திய சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளார் ஜான் பாண்டியன்.

திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் டிக்கெட் கேட்டிருந்தார் பிரிசில்லா. இருப்பினும் அவருக்கு ராமநாதபுரத்தில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

பிரிசில்லா பாண்டியன் ஒரு வழக்கறிஞர் ஆவார். நெல்லை பாளையங்கோட்டையில், தேவேந்திரர் கல்வி மற்றும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

ஜான் பாண்டியன் நடத்தி வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அதன் வேட்பாளராகியுள்ளார்.

அதேபோல விருதுநகர் தொகுதி வேட்பாளரான கனகராஜ் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

கன்னியாகுமரி வேட்பாளர் சிவகாமியும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X