அன்புமணி தலைமையில் ஜெ.வை சந்தித்து ஆசி பெற்ற பாமக வேட்பாளர்கள்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் ஏழு பேரும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் ஏ.கே.மூர்த்தி, திருவண்ணாமலையில் ஜெ.குரு, தர்மபுரியில் டாக்டர் செந்தில்குமார், சிதம்பரம் (தனி) தொகுதியில் பொன்னுசாமி, கள்ளக்குறிச்சியில் தன்ராஜ், அரக்கோணத்தில் வேலு, புதுச்சேரியில் பேராசிரியர் மு.ராமதாஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஆகியோரது தலைமையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேற்று மாலை சென்றனர்.
அனைத்து வேட்பாளர்களும் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர்.
பின்னர் வேட்பாளர்களோடு வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணியின் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து, 7 பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்த்துக்களை பெற்றோம்.
எங்களின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதுபோல வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
அ.தி.மு.க. கூட்டணி ஓரிருநாளில் முடிவாகிவிடும்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் எப்போது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
பாட்டாளி மக்கள் கட்சியை தாக்கி முதல்-அமைச்சர் கருணாநிதி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருவது குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications