தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி-400 பேர் ஊடுருவல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவை தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. காஷ்மீர் எல்லை வழியாக 400 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சமகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சதி திட்டமி தீட்டி வருவது அம்பலமாகியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, பாகிஸ்தான் எல்லையோற பகுதிகளில் சுமார் 50 தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக தெரிகிறது. இங்கு நன்கு பயிற்சி பெற்ற 400 தீவிரவாதிகள் எந்நேரமும் இந்தியாவுக்குள் ஊடுருவும் வகையில் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு பிரிவினர் கடந்த வாரம் குப்வாரா காட்டு பகுதியாக ஊடுருவ முயன்ற போது இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். குப்வாரா பகுதி அடர்ந்த காடு என்பதால் இவர்களை முற்றிலுமாக அழிக்க இந்திய படையினருக்கு சுமார் ஒரு வாரம் தேவைப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரில் கோடை காலம் ஆரம்பமாகி விட்டதால், பனி மலைகள் உருக துவங்கியுள்ளன. அதிக பனி காரணமாக இந்த வழியாக ஊடுருவ முடியமால் காத்திருந்த தீவிரவாதிகள் தற்போது இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஊடுறுவ தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களுடன் தாலிபான் தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என தெரிகிறது. லோக்சபா தேர்தலை சீர்குலைப்பதே இவர்களது முக்கிய நோக்கம் என்று தெரிகிறது. இதையடுத்து எல்லைப் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவி 40 முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தாவும், பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங்கும், காஷ்மீர் சென்று பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசித்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் கூறுகையில், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்தி, அவர்களது தாக்குதல் திட்டங்களை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என இருக்கவேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

ஹிஜிபுல் முகாஜிதின் மிரட்டல்...

இந்நிலையில் ஹிஜிபுல் முகாஜிதின் தலைவர் சலாவுதீனும் தேர்தல் சமயத்தில் தாக்குதல் நடத்தபோவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர் 13 பெண் தற்கொலை படை திவீரவாதிக்ள் உட்பட 20 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக் கூறப்ப்டடுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் விமான ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதால், நியூயார்க் உலக வர்த்தக மைய தாக்குதல் போல் விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+