சென்னை படகு விபத்து-3 பேர் பலி, 13 பேரை காணவில்லை
சென்னை: சென்னை அருகே 20 பேர்களுடன் கடலில் உல்லாச சுற்றுலா சென்ற படகு மூழ்கியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தப்பி கரை சேர்ந்தனர். மற்றவர்கள் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
சென்னை எண்ணூரில் நேற்று நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவுக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து குவிந்தார்கள். கோயில் விழாவுக்கு வரும் மக்கள் கடலில் படகு சவாரி போவது வழக்கம்.
நேற்று திருவிழாவுக்கு வந்தவர்களில் 20 பேர்களை சுமந்து மதியம் சுமார் 2.30 மணிக்கு படகு ஒன்று எண்ணூருக்கு அருகே கடலுக்குள் சென்றது. அந்த படகில் 10 பேருக்கு மேல் செல்வது கடினம். ஆனால், 20 பேர் சென்றதை அடுத்து படகு பாரம் தாங்க முடியாமல் கடலில் தத்தளித்தது.
இந்நிலையில் அங்கு திடீரென ராட்சத அலைகள் எழுந்தது. அதில் சிக்கிய படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 20 பேரும் மூழ்கினார்கள்.
இதில் பயணம் செய்த இமயவர்மன், ராஜசேகர், மணிமாறன், முனியசாமி ஆகிய 4 பேரும் நீந்தி கரைக்கு வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் ஆசைத்தம்பி, நாகராஜ், பிளஸ் 1 மாணவர் வினோத்குமார் உள்ளிட்ட மூன்று பேரின் உடல்களை மீட்டனர். மற்ற 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. நேற்று இரவு முழுவதும் போலீசார் தேடிய போதும் இருட்டு அவர்களுக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி தொடர்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications