யுஎஸ்:மனைவி ஓட்டம்-5 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவி வீட்டைவிட்டு கள்ளக்காதலுடன் ஓடியதால் கோபமடைந்த கணவர் ஒருவர் தனது 5 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணம் டிரைலர் பார்க் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹரிசன் (34). இவரது மனைவியின் பெயர் ஏஞ்சலா. இவர்களுக்கு மேக்சின் (16), சமந்தா (14), ஜோமி (11), ஹீதர் (8), ஜேம்ஸ் (7) என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
ஏஞ்சலாவுக்கும் மற்றொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது ஜேம்சுக்கு சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையி்ல் அடிக்கடி சண்டை எழுந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏஞ்சலா தனது கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இதையறிந்த ஜேம்சுக்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்துள்ளது. இதையடுத்து தனது நடமாடும் வீட்டுக்கு வந்த அவர் தனது ஐந்து குழந்தைகளை சுட்டு கொன்றார். நான்கு குழந்தைகள் படுக்கை அறையிலும், ஒரு குழந்தை குளியலறையிலும் பிணமாக கிடந்தனர்.
இதையடுத்து வீட்டைவிட்டு வெளியே ஜேம்ஸ் தனது மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை சுட்டுக் கொல்ல காரில் கிளம்பினார். பின்னர் குழந்தைகளை கொன்றதை நினைத்து வருந்தி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜேம்ஸ் வீட்டுக்கு வந்த உறவினர் வெகு நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை என ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் குழந்தைகள் பிணமாக கிடைப்பதை அறிந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் குடும்ப பிரச்சினை, மன அழுத்தம் போன்ற சாதாரண பிரச்சினைகளுக்காக துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டு அடுத்தவர்கள் உயிரை எடுக்கும் கொடூர சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது அமெரிக்க அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications