அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்க தடை
சென்னை: தண்ணீர் பந்தல் அமைத்து அதன்மூலம் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகளுக்கு தண்ணீர் பந்தல்கள் அமைப்பதற்கு விரைவில் தடை கொண்டுவர தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடைமுறைகள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன. இதை தவிர்த்து தேர்த்ல ஆணையம் பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தேர்தலை நியாயமான முறையில் நடத்த முழு முயற்சி செய்து வருகிறது.
வீட்டு சுவர்களில் உரிமையாளர்கள் உத்தரவின்றி விளம்பரங்கள் எழுத கூடாது என்றும், அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படங்கள் இருக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோடை காலம் துவங்கிவிட்டதை அடுத்து, வெயில் மக்களை வாட்டி வருகிறது. நேற்று முதல் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் வாகன ஓட்டிகளுக்கு தண்ணீர், நீர்மோர் மற்றும் ஜுஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து பல கட்சிகளும் தண்ணீர் பந்தல் வைத்து வாக்காளர்களை கவர முயற்சித்து வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் குடிக்க நீர்மோர் கூட கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
இது வாக்காளர்களை கவரும் யுக்திகளில் ஒன்றாக கருதப்படுவதால், தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்க தடை விதிக்க, தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தண்ணீர் பந்தல் வைத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கட்சிகள், கட்சி கொடி, தலைவர்கள் படம், கட்சி சின்னம் என எந்த தோரணமும் இல்லாலம் தண்ணீர் பந்தல் வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். இதற்கான உத்தரவுகளை தேர்தல் ஆணையம் விரைவில் பிறப்பிக்க இருப்பதாக தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications