இலங்கை கடத்திய 23 தமிழக மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட 23 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை அவர்கள் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதி கச்சச்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அவர்களது 6 படகுகளுடன் கடத்திச் சென்றனர்.

மன்னார் கொண்டு செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் முகாமில் அடைக்கப்பட்டனர்.

இதைக் கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், இது தேர்தல் நேரம் என்பதால் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் வேகமாக நடவடிக்கையில் இறங்கின.

இதையடுத்து இலங்கை அரசு 23 மீனவர்களையும் விடுவித்தது. இன்று மாலை அனைவரும் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவர்களை கடலோரக் காவல் படை ராமேஸ்வரம் கொண்டு வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+