திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம்-விரமணி
தி்ருச்சி: வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிக்கின்றோம். அதன் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம் என்று திக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் திக தலைவர் கீ.வீரமணி நிருபர்களிடம் கூறுகையில்,
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிக்கின்றோம். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். அரசின் சாதனைகளை பட்டியல் போட்டு புத்தகமாக வெளிட்டு மக்களுக்கு வழங்குவோம். 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.
மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. ராமர் கோயில் கட்டுவோம் என்ற கருத்தை பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளே ஏற்றுக்கொள்ளவில்லை.
மத்திய அரசை பொறுத்தவரை நிலையான ஆட்சி முக்கியம். அதை 5 ஆணடுகள் கொடுத்த பெருமை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு முக்கியம்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் மாநிலம் முழுவதும் வரும் 12ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications