தேர்தல் பணி-தமிழகத்தில் வனத்துறைக்கு விலக்கு
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இருந்து வனத்துறையினருக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
வரும் மே 13ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையம் வழக்கம் போல் தேர்தல் பணிகளுக்கு அரசு ஊழியர்களை அழைத்துள்ளது.
தேர்தல் பணிகளுக்கு வனத்துறை பயன்படுத்துவது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம், வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களிடம் பேசிவிட்டு முடிவெடுக்க நினைத்தது.
இதையடுத்து வனவிலங்கு ஆர்வலர் சேகர் தத்தாத்ரி நேற்று தமிழ்நாடு தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவை சந்தித்து அறிக்கை ஒன்றை கொடுத்தார்.
அதில், வனவிலங்குகளுக்கு வேட்டைகாரர்களிடம் அதிக அச்சுறுத்தல் இருக்கிறது. சில கும்பல்கள் வனத்துறையினர் எப்போது தேர்தல் பணிகளுக்கு செல்வார்கள் என விலங்குகளை வேட்டையாட காத்திருக்கிறது.
மேலும் தற்போது வனத்துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. வனத்துறையினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தினால் விலங்குகளுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்படும். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதன் பின்னர் பத்திரிகை ஒன்றுக்கு சேகர் தத்தாத்ரி அளித்த பேட்டியில் வனவிலங்குகளை காப்பாற்றும் எண்ணத்தில் நரேஷ் குப்தா உறுதியாக இருக்கிறார். அவர்கள் வனத்துறையினருக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிப்பதாக உறுதி கூறியுள்ளார் என்றார் தத்தாத்ரி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications