பணநாயகம் தோற்க வேண்டும்: சிவகாமி

சிவகாமி நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமரி தொகுதியில் யானை சின்னத்தில் போ்ட்டியிடுகிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சி கன்னியாகுமரியில் வேகமாக வளர்த்து வருகிறது. இங்கு படித்தவர்கள் அதிகம் உள்ளனர். தனி நபர் வருமானமும் அதிகமாக உள்ளது. எனவேதான் கன்னியாகுமரி தொகுதியை தேர்ந்தெடுத்தேன்.
பல கட்சிகள் இங்கு ரப்பர் தொழிற்சாலை துவக்குவதாக அறிவிப்பு செய்கிறார்களே தவிர இதுவரை துவக்கவில்லை.
பூ அதிகம் உள்ள தோவாளையில் பூ தொடர்பான தொழிற்சாலைகள், வாழை சாகுபடி அதிகம் நடப்பதால் வாழை நார் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் துவக்குவதற்கான வசதிகள் உள்ளது.
கடற்கரையோரம் 48 கிராமங்களில் மீனவர்கள் உள்ளனர். மீனவர்களுக்கு தேவையான மீன்பிடி தளங்கள், மீன்பிடி துறைமுகங்கள், விற்பனை நிலையங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும். உபியில் மாயாவதி இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி வருகிறார்.
கன்னியாகுமரி தொகுதியில் தான் வெற்றி பெற்றால் இவை அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்பதை கூறி ஓட்டு கேட்கிறேன். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றுவது அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூற மட்டுதான் முடியும்.
அரசியலில் அரசின் திட்டங்களை மக்களுக்கு வாங்கி கொடுக்க முடியும். ஐஏஎஸ் பதவியை விட அரசியல் பணிதான் அதிக அதிகாரம் உடையது. எனவேதான் அரசு பணியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தேன்.
இப்போது பண நாயகமா, ஜனநாயகமா என்ற போட்டி நடந்து வருகிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள கன்னியாகுமரி மாவ்ட்டத்தில் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதை சிந்தித்து போடுவார்கள். பண நாயகம் தோற்க வேண்டும், ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
களை கட்டியது கன்னியாகுமரி
இதற்கிடையே, கன்னியாகுமரி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடி பிடிக்க தொடங்கிவிட்டது.
தொகுதி பங்கீட்டை முடித்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. தி்முக சார்பில் ஹெலன் டேவிட்சன், மார்க்கிஸ்ட் சார்பில் தற்போதைய எம்பி பெல்லர்மின், தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் சார்பில் சிவகாமி ஐஏஎஸ் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இந்த தொகுதியின் முதல் வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சியின் சிவகாமி ஐஏஎஸ் அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த ஒரு மாதமாக தீவர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அத்வானி அந்த தொகுதியில் பொன்ராதாகிருஷ்ணன் தான் வேட்பாளர் என அறிவித்தார்.
அதை தொடர்ந்து அவரும் பிரசாரத்தை தொடங்கி வி்ட்டார்.
அதை தொடர்ந்து ஆஸ்டினை ஆதரி்த்து விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் திமுக வேட்பாளராக ஹெலன் டேவிட்சன் அறிவிக்கப்பட்டார்.
உடனடியாக பிரச்சார பணிகளை தொடங்கியுள்ள அவர் மாவட்ட பிசப்புகள் பீட்டர் ரெமிஜியூஸ், தேவகடாட்சம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். அதிமுக கூட்டணியி்ல் நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த தொகுதி மார்க்ஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போதைய எம்பி பெல்லர்மின் மீண்டும் போட்டியிடுகிறார்.
தொகுதி தங்களுக்குதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்கிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே தேர்தல் பணிகளை துவக்கி விட்டனர்.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பொறுத்தவரை கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என்று அனைத்தும் நிறைவடைந்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தொகுதி முழுவதும் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications