அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாதான் உலகின் பொருளாதார வல்லரசு!
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் அடுத்த ஆண்டு வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்றும், இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாதான் தனிப்பெரும் பொருளாதார சக்தி என்றும் கோல்ட்மேன் சாஷ் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு 5.2 சதவிகித வளர்ச்சியே அடையும் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்தது. ஆனால் சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தையும் பாதித்துவிட்டது. இப்போது இறுதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்கிறது கோல்ட்மேன் சாஷ். ஆனால் அடுத்த ஆண்டு நல்ல வளர்ச்சி இருக்கும். 7.8 சதவிகித வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் அந்த வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது,
சமீபத்தில் சிகாகோவில் நடந்த பொருளாதார மாநாட்டில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் அவ் வங்கியின் பொருளாதாரப் பிரிவு தலைவர் ஓ நீல்.
இப்போதைக்கு இந்தியா செய்ய வேண்டியது, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான வர்த்தக தடைகளை விலக்கிக் கொள்வதுதான்.
ஆனால் இருபது ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம்தான் தனிப்பெரும் சக்தியாகத் திகழப் போகிறது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்த கதையைத்தான் பேசி வியக்கப் போகிறது உலகம்.
ஆண்டுக்கு 6 சதவிகித வளர்ச்சி என்ற அளவிலேயே வளர்ந்தால் கூட, அடுத்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சும் அளவு இந்தியா வளரும் என்கிறார் ஓ நீல்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications