சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் ரூ.33161 கோடி தனியார் முதலீடு!

நாட்டில் உள்ள முதல் நிலை நகரங்கள் டெல்லி, மும்பை போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள தனியார் துறை முதலீட்டோடு ஒப்பிடுகையில் இது 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகும்.
இந்தியாவின் முதல் நிலை நகரங்களில் இதே காலகட்டத்தில் ரூ.14240 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அஸோஸெம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டிலேயே உள் கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் துறையின் முதலீட்டை அதிகம் கவர்ந்திழுப்பவை இன்றைக்கு சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று தென்னிந்திய நகரங்கள்தான். தனியார் துறையின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட 70 சதவீதம் கடந்த மூன்றாண்டுகளில் இந்த நகரங்களில்தான் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களில் மட்டுமே ரூ.12990 கோடி மதிப்பிலான 12 ரியல் எஸ்டேட் திட்டங்கள் இந்த நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 6 திட்டங்கள் பெங்களூரில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ. 12150 கோடியில் 5 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ரூ.4000 கோடி மதிப்பில் ஐடிசி ஓட்டல் உள்பட பல ஹோட்டல்கள் இந்த 6 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளன.
பரப்பளவில், மக்கள் தொகையில் இவை சற்று சிறிய நகரங்களாக இருந்தாலும், சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான மக்கள், நிலையான அரசியல் தன்மை, கல்வியறிவு, குறைந்த ஊதியத்துக்கும் உழைக்கத் தயாராக உள்ள தொழிலாளர்கள் போன்ற காரணங்கள்தான் இந்த நகரங்களுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதாக அஸோஸெம் தெரிவித்துள்ளது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications