சாதி கணக்கெடுப்பு: பாமக கோரிக்கை-சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
டெல்லி: இந்தியாவில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவி்ட்டது.
இந்தியாவில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கொடுத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை சரியாக அடையாளம் காண வேண்டும் என பாமக சார்பில் சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன், நீதிபதி ப.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பாமக சார்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்மா குமார் வாதாடுகையில்,
கடந்த 10 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டியலில் திருத்தப்படவில்லை. இது தொடர்பாக அரசிடம் பல முறை எடுத்து கூறியுள்ளோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சரியான ஒதுக்கீடுகள் கிடைக்க சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். இந்தியாவில் சாதி என்பது சமூக அடிப்படையி்ல் மட்டும் பிரிக்கப்படவில்லை. சமுதாயத்தில் அரசியல் மட்டும் வேலை வாய்ப்பிலும் சாதி பிரிவு உள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறுகையில்,
இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடவோ அல்லது வழிகாட்டவோ முடியாது. புதிய அரசு அமையும் வரை பொறுத்திருங்கள். நீங்களும் அதில் இடம்பெறலாம். அப்போது அவர்களிடம் உங்கள் கோரிக்கை சொல்லுங்கள் என்றனர.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications