காஞ்சி ராஜேந்திரன் தென் சென்னை அதிமுக வேட்பாளர்

அதிமுகவின் சுறுசுறுப்பான தளபதிகளில் ஒருவர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். கட்சித் தலைமை அறிவிக்கும் ஒவ்வொரு போராட்டத்தையும் படு பிரமாண்டமாக நடத்தி தலைமையின் மனம் கவர்ந்தவர் ராஜேந்திரன்.
உள்ளூரில் ஏதாவது பிரச்சினை என்றால் ஓடி வந்து முதலில் நிற்பார்.
இவர் சார்ந்த சிட்லபாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தொகுதி இதுநாள் வரை தென் சென்னை எம்.பி. தொகுதியின் கீழ் இருந்தது. ஆனால் தற்போது ஸ்ரீபெரும்புதூருக்குப் போய் விட்டது.
இருப்பினும் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் கட்சி விசுவாசத்தைப் பாராட்டும் வகையில் மதிப்புமிக்க தென் சென்னை தொகுதியில் அவரை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
பெரிய பெரிய தலைவர்கள் நின்று வென்ற தொகுதி இது. அதிமுகவில் ராஜேந்திரனை விட பெரிய ஆட்கள் எல்லாம் சீட்டுக்காக காத்திருந்தும் கூட அவரைத் தேடி சீட் வந்துள்ளதால் உற்சாகமடைந்துள்ளார்.
1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை சிட்லபாக்கம் பேரூராட்சி துணைத்தலைவராக இருந்தார். 1987-ம் ஆண்டு சிட்லபாக்கம் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளராகவும், 1999-ம் ஆண்டு கிழக்கு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் ஆனார். 2000-வது ஆண்டு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்தார்.
2001-ம் ஆண்டு மீண்டும் மாவட்ட செயலாளராக இவரை ஜெயலலிதா நியமித்தார். கட்சியில் மேலும் பல பதவிகளை வகித்தவர். இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், பிரவீன்(20), அஸ்வின்(18) என்ற மகன்களும் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications