பாளை சிறையில் அதிரடி சோதனை-செல்போன் பறிமுதல்
நெல்லை: பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதியின் அறையிலிருந்து போலீசார் செல்போனை ஒன்றை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
சிறைச்சாலைகள் மனித ஒழுக்கத்தை அதிகரிக்கவும், தவறு செய்தவர்கள் தங்களை உணர்ந்து திருந்தி புது வாழ்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டவை. ஆனால், தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் கஞ்சா, சிகரெட் ஆகியவை சர்வசாதாரணமாக கிடைக்கிறது.
பாளையங்கோட்டை மத்திய சிறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா ஆகிய இங்கு தங்கு தடையின்றி கிடைத்து வருவதாக தெரிகிறது.
இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் அடிக்கடி கைதிகளை சோதனை போட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மீண்டும் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது வெளிச்சிறையில் 2ம் எண் அறையில் இருந்த உப்பு டப்பாவிலிருந்து செல்போன் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதில் சிம்கார்டு எதுவும் இல்லை.
அந்த அறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ஆத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்த சிம்கார்டு கிடைத்தால் சம்பந்தப்பட்ட சங்கர் யார், யாரிடம் பேசியுள்ளார், ஏதேனும் சதி திட்டங்கள் உள்ளனவா, என்பது குறித்து தெரியவரும்.
இதையடுத்து சிறை அதிகாரிகள் பாளை, பெருமாள்புரம போலீசில் புகார் செய்தனர். செல்போன் போலீசாரிடம் ஓப்படைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications