திருவள்ளூர்-2வது முறையாக வேட்பாளரை மாற்றிய ஜெ: விழுப்புரத்துக்கும் புது வேட்பாளர்

திருவள்ளூர் (தனி) தொகுதி வேட்பாளராக முன்பு ராஜன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் கிறிஸ்த தலித் என்பதால் போட்டியிட்டால் சிக்கல் வரும் என்பதால் நேற்று முன்தினம் அவர் மாற்றப்பட்டார்.
இந் நிலையில் ராஜனுக்குப் பதில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இன்பராஜையும் மாற்றி விட்டார் ஜெயலலிதா. அவருக்குப் பதில் டாக்டர் வேணுகோபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்பராஜும் தலித் கிறிஸ்தவர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரையும் ஜெயலலிதா மாற்றலாம் என நேற்றே தட்ஸ்தமிழ் சொன்னது.
இந் நிலையில் இன்பராஜை மாற்றிவிட்டு மீண்டும் ஒரு புதிய வேட்பாளரை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
விழுப்புரத்திற்கு ஆனந்தன்..
இதேபோல விழுப்புரம் தனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கபப்ட்ட முருகன் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் ஆனந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை மாற்றியதற்குக் காரணம் முருகன் மீது வந்து குவிந்த புகார் மலை தானாம்.
அதே போல ஆரணி தொகுதி வேட்பாளர் மீதும் அதிருப்தி நிலவுவதால் அதிமுகவின் இந்த வேட்பாளர் மாற்றங்கள் இன்னும் தொடரும் என்றே தெரிகிறது.
முன்னதாக பெரம்பலூரில் திமுக சார்பில் நிற்கும் வலுவான நடிகர் நெப்போலியனை எதிர்த்துப் போட்டியிடும் வகையில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் மருதை ராஜையும் ஜெயலலிதா மாற்றினார். இவர் திமுகவினருடன் மிக நெருக்கமாக இருப்பதால் மாற்றப்பட்டார்.
இந் நிலையில் வேட்பாளர் மாற்றம் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் அதிமுக ஆட்சி மன்றக் குழு மறுபரிசீலனை செய்து வேட்பாளர்களை மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications