மன்மோகனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்-வைகோ
விருதுநகர்: இலங்கை தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கி உதவி வரும் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரை இந்த தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் வைகோ 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இரண்டு முறை சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ள இவர் இம்முறை மறுசீரமைப்புக்கு பின்னர் புதிததாக உருவாக்கப்ப்டடுள்ள விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் வைகோ பேசுகையில்,
இலங்கை தமிழர்களை காவு கொடுக்க ஆயுதம் தந்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நான் பிரிவினைவாதம் பேசுகிறேன் என்கிறார்கள். கருணாநிதி இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பூகம்பம் வெடிக்கும் என்றார். பூகம்பம் வெடித்தால் எத்தனை பேர் சாவார்கள். அது பிரிவினைவாதம் இல்லையா?
இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் 13 பேர் தீக்குளித்தார்கள். அதுபோலத்தான் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் இங்கு உள்ள இளைஞர்கள் தீக்குளித்து ரத்த ஆறு ஓடும் என்றேன். இதனை பிரிவினைவாதம் பேசுவதாகவும், இந்திய இறையாண்மை எதிராக பேசுவதாக கூறி என் மீது வழக்கு போட்டார்கள். இந்த வழக்குகளுக்கு எல்லாம் நான் பயந்துவிட மாட்டேன்.
கட்சியின் கட்டளையின்படி போட்டி...
நான் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பேசினேன். அதனை வெளியில் சொல்ல முடியாது. கட்சி கட்டளையிட்டபடி இந்தத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நான் போட்டியிடாவிட்டாலும் தொண்டர்கள் கோபம் அடைவார்கள்.
நான் சிவகாசியில் எம்பியாக இருந்தபோது என் அலுவலக கதவு திறந்தே இருந்தது. கட்சி பாகுபாடு இன்றி 8,000க்கும் மேற்பட்ட ஏழை ஊனமுற்ற குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளேன்.
65,000 குழந்தைகளுக்கு 3 முறை மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம் நடத்தியுள்ளேன். பல ரயில் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளேன்.
தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளனர். அதைத் தாண்டி நாம் வெற்றி பெற வேண்டும். தோழமை கட்சியினர்களை முன்னிறுத்தி வாக்குகள் கேட்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும் என்றார் வைகோ.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications