குஜராத் கலவரம்: மாஜி டிஜிபி நிரபராதி-புலனாய்வு பிரிவு
டெல்லி: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னாள் டிஜிபி பி.சி.பாண்டேவுக்குத் தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுப் பிரிவுதெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் பெரும் மதக் கலவரம் மூண்டது. முஸ்லீம் சமுதாயத்தினர் விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அப்போது அகமதாபாத் நகர கமிஷனராக இருந்தார் பாண்டே.
கலவரத்திற்கு அவர் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுப் படை தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில் பி.சி.பாண்டேவுக்கு கலவரத்தில் தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..
குல்பர்க்கில் நடந்த சம்பவத்தின்போது (இந்த வன்முறையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் சங் பரிவார் கும்பலால் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர்) பி.சி.பாண்டே மருத்துவமனையில் இருந்தார். கலவரத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். காயமடைந்தவர்களுக்கு அவர் உதவிக் கொண்டிருந்தார்.
பி.சி.பாண்டேவுக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தீஸ்தா தலைமையிலானவர்கள் சமர்ப்பித்த புகார்கள் அனைத்தும் தவறானவை. உள்நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரிஜித் பசாயத், குஜராத் கலவரம் தொடர்பாக 10 முக்கிய வழக்குகள் (குல்பர்க், நரோடா பாதியா, சர்தார் புரா உள்பட) உள்பட அனைத்து வழக்குகளையும் விசாரிக்க தேவையான அளவு தனி கோர்ட்டுகளை குஜராத் அரசு நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் குஜராத் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகளை குஜராத்திலிருந்து வெளிமாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பான கோரிக்கை குறித்து குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications