'பிரியாணி'-வேலூர் தேமுதிக தலைவருக்கு செருப்படி
வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பிரச்சாரம் செய்த தேமுதிகவினருக்கு இடையே பிரியாணி பொட்டலத்தை கைப்பற்றுவதில் அடிதடி ஏற்பட்டது. இதில் வேலூர் அவை தலைவருக்கு செருப்படி விழுந்துள்ளது.
திருப்பத்தூரில் வேலூர் தேமுதிக வேட்பாளர் சவுகத் ஷெரீப் தனது தொண்டர்களுடன் பிரசராத்தில் ஈடுபட்டார்.
அப்போது, வேலூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தண்டபாணியும், மாவட்ட அவைத் தலைவர் செந்தில்குமாரும் சவுகத் ஷெரீப்புக்கு ஆதரவாக தனித்தனி கோஷ்டியாகச் பிரிந்து சென்று ஓட்டு சேகரித்துள்ளனர்.
இதையடுத்து காலையில் பிரச்சாரம் முடிந்து மதிய உணவுக்காக பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.
பிரியாணி பொட்டலம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு தண்டபாணி கோஷ்டிக்கும், செந்தில் குமார் கோஷ்டிக்கும் இடையே மோதலாக வெடித்தது. இதில் தண்டபானி கோஷ்டியினர் சிலர் ஒன்று கூடி செந்தில்குமாரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். இதில் செந்தில் குமாரின் சட்டை, வேஷ்டி கிழிந்தது.
மேலும் சிலர் செந்தில்குமாரை செருப்பால் அடித்தனர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். இந்த சம்பவம் குறித்து இரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications