ராகுலுக்கு பிரியங்கா குழந்தைகள் ஓட்டு வேட்டை!

உ.பி. மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்காக அங்கு பிரியங்கா காந்தி முகாமிட்டு ஓட்டு வேட்டையாடுகிறார்.
அவருடன் நேற்று பிரியங்காவின் பிள்ளைகளான ரைஹான் மற்றும் மிரயா ஆகியோரும் ராகுல் மாமாவுக்கு வாக்கு சேகரிக்க அம்மாவுடன் கிளம்பி விட்டனர்.
பிரியங்காவுடன் சென்ற அவர்கள் வழியெங்கும் திரண்டிருந்த வாக்காளர்களைப் பார்த்து அவர்கள் காலில் போய் விழுந்து கும்பிட்டு வணங்கி, மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டனர்.
தங்களது அம்மா பிரியங்கா பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு கேட்பதைப் பார்த்த இவர்கள், அதே பாணியில் எதிரில் யாராவது பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுந்து வணங்கி மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்கின்றனர்.
தங்களது மாமா ராகுலைப் போலவே வெள்ளை பைஜாமா, குர்தாவுடன் கலக்கலாக இவர்கள் ஓட்டு வேட்டையாடுவதைப் பார்த்து அமேதி தொகுதியே அதிசயித்துக் கிடக்கிறது.
கடந்த 3 நாட்களாக இந்த சுட்டிகள் இருவரும் கெஸ்ட் ஹவுஸில் பலத்த பாதுகாப்புடன்தான் இருந்தனர். ஆனால் தற்போது இவர்களும் பிரசாரக் களத்தில் குதித்து விட்டனர்.
சகோதரருக்காக அமேதியில் ஓட்டு வேட்டையாடும் பிரியங்கா, அருகில் உள்ள ரேபரேலியில் போட்டியிடும் சோனியாவுக்காகவும் பிரசாரம் செய்து வருகிறார். இரு தொகுதிகளையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ள பிரியங்கா இரு தொகுதிகளுக்கும் மாறி மாறிப் போய் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications