பல கோடி சொத்துக்களைக் குவித்துள்ள தங்கபாலுவை விசாரிக்க கோரி வழக்கு
சென்னை: தமிழ காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வருமானத்திற்கு மீறிய வகையில் பல கோடி சொத்துக்களைக் குவித்துள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து பழனிவேல் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் தங்கபாலு, வருமானத்திற்கு மீறிய வகையில் பெருமளவில் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவர் வைத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சிபிஐக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தங்கபாலுவின் சொத்து குவிப்பு குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
'கருணாநிதியின் ஆதரவு-காங்கிரஸ் மறக்காது':
இந் நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு,
மக்களவை தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆருடம் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு, 5 ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவும், தேவையான ஒத்துழைப்பும் வழங்கும். மத்தியில் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 5 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தியுள்ளார்.
இதற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த ஆதரவை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் மறக்காது. கூட்டணி மாறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பாமகவுக்கு என்று நிலையான கொள்கைகள் எதுவும் இல்லை. அதனால் தான் டாக்டர் ராமதாஸ் இப்படி பேசிவருகின்றார் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications