மத்தியப் பிரதேசத்தில் அத்வானி மீது செருப்பு வீச்சு

Subscribe to Oneindia Tamil

Advani
போபால்: பாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார்.

கத்னி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால், அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை.

பிடிக்காதவர்கள் மீது ஷூ, செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி விட்டது. ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசப்பட்டது போல இப்போது இந்தியத் தலைவர்கள் மீதும் ஷூக்கள் வீச்சு தொடர் கதையாகியுள்ளது.

முதலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஷூ வீசினார், இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் நவீன் ஜிந்தால் மீது ஒரு முதியவர் செருப்பை வீசினார். இப்போது அத்வானி மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் ப.சிதம்பரம் மீது காரைக்குடியில் உருட்டுக்கட்டை வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+