பிரதமராகும் முழு தகுதி அத்வானிக்கு உண்டு-வாஜ்பாய்
டெல்லி: அத்வானி பிரதமராக பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கோரிக்கை விடுத்துளளார்.
பாஜகவுக்காக இதுவரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார் வாஜ்பாய். அதே போல அக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானிக்காகவும் குரல் கொடுக்காமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் மூத்த ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தனது அமைதியைக் கலைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவுக்கு அத்வானி போன்ற உறுதியான தலைவர் தேவை. எனது தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த ஆட்சியில் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்தோம்.
நான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், இந்த நாட்டு மக்களை வாழ்த்த விரும்புகிறேன். எனது உடல் நலத்தை விட, மக்களின் நலமே முக்கியம்.
அத்வானி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், நாட்டு மக்களுக்கு அது பொற்கால ஆட்சியாக அமையும். பிரதமராக அத்வானிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன.
பாஜக கூட்டணி வெற்றி பெற்று, அத்வானி பிரதமரானால் என்னுடைய தலைமையில் நடந்த ஆட்சி போல, அவரது தலைமையிலும் சிறப்பான ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
காங்கிரஸ் கூட்டணியிடமும் 3வது அணியிடமும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், இந்த நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிட்டது. 3வது அணியின் ஒரே நோக்கம் ஆட்சியை கைப்பற்றுவதுதான். அதைத்தவிர அவர்களிடம் எந்த மக்கள் நல திட்டமும் இல்லை.
இதனால் அத்வானி பிரதமராக வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications