'தமிழகத்துக்கு நீர் தராத கம்யூ.-பாஜக-காங் அரசுகள்'
கோவை: கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டுகளும் கர்நாடகத்தை ஆளும் பாஜகவும் ஆந்திராவை ஆளும் காங்கிரசும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கின்றன. இதனால் இந்தக் கட்சிககளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
கோவை தொகுதி வேட்பாளர் பாண்டியனுக்கு ஆதரவாக சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம், தெப்பக்குளம், காந்திபுரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த் பேசுகையில்,
நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஆனால் வருமானம் செருப்பு போல் தேய்ந்து விட்டது. இங்குள்ள அரசியல் கட்சிகள் பாம்பு சட்டையை உரிப்பதுபோல் அவ்வப்போது மாறிக் கொள்வார்கள். இங்கே கம்யூனிஸ்ட் கட்சியினர் ஓட்டுக் கேட்பார்கள். ஆனால் கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டுகள் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டுமா?.
அதேபோல் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. காவிரி நதி நீரை நமக்கு தர மறுக்கிறார்கள். ஆனால் இங்கே உங்களிடம் ஓட்டு கேட்பார்கள்.
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பாலாற்று தண்ணீரை கேட்டால் தமிழகத்துக்கு தர மறுக்கிறார்கள்.
ஆனால், இந்த கம்யூனிஸ்டுகள், பாஜக, காங்கிரசுக்கு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆதரவு தந்து வருகின்றன. அதனால்தான் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசிடம் திமுக நீர் வளத்துறை அமைச்சர் பதவியை வாங்கியிருந்தால் அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீரை பெற்று தந்திருக்கலாம்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை வாங்கியிருந்தால் இலங்கையில் அன்றாடம் போரில் இறக்கும் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆதாயம் கிடைக்கும் வேறு துறைகளை வாங்கினார்கள்.
மின்சார தட்டுப்பாடு பற்றி பேசினால் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.
தேர்தல் அதிகாரிகளே, காவல்துறை அளிக்கும் தகவல்களை நம்பாதீர்கள்.
எனக்கொரு வாய்ப்பு தாருங்கள். 40 தொகுதிகளிலும் தேமுதிகவை ஜெயிக்க வைத்தால் நாட்டையே மாற்றிக் காட்டுவேன். நாம் கைகாட்டுபவரே பிரதமர் என்றார் விஜயகாந்த்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications