166 பேரை கொன்றதாக கஸாப் மீது குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று ஆர்தர் சாலை சிறப்பு நீதிமன்றத்தில் முறைப்படி விசாரணைக்கு வருகிறது. அப்போது 166 பேரைக் கொன்றதாக கஸாப் மீது விசாரணை நடைபெறவுள்ளது.

சமீபத்தில்தான் கஸாப்புக்கான வக்கீலாக அப்பாஸ் கஸ்மி என்பவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து விசாரணை தொடங்குகிறது.

இதில் மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தி 166 பேரைக் கொன்றதாக கஸாப் மீது விசாரணை நடைபெறவுள்ளது.

விசாரணையையொட்டி வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் ஆர்தர் சாலை சிறைச்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு வெளியே 450 ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கஸாப்பை சிறை அறையிலிருந்து கோர்ட்டுக்கு தனியாக அமைக்ப்பட்ட குண்டு துளைக்காத காரிடார் வழியாக அழைத்து வருவார்கள்.

மீடியாவுக்கு உள்ளே செல்ல ப்லவேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாத வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கூட உள்ளே செல்ல முடியாது.

கஸாப்புக்கு வக்கீல் கிடைக்காததால் விசாரணையைத் தொடங்க தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது வக்கீல் கிடைத்து விட்டதால் இன்று முதல் விசாரணை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+