திருச்சி காங்கிரஸ் எம்.பி ஆவாரா சாருபாலா தொண்டமான்?

எம்.ஏ., எம்.பில் படித்துள்ள சாருபாலா தொண்டமான் தற்போது திருச்சி மாநகர மேயராக இருக்கிறார். மேயர் பதவியை அவர் வகிப்பது இது 2வது முறையாகும்.
1958ம் ஆண்டு பிறந்த சாருபாலாவின் கணவர் ராஜ ராஜ கோபால தொண்டமான். பொருளாதாரத்தில் எம்.ஏ., எம்.பில் முடித்துள்ள சாருபாலா, தற்போது பி.எச்.டியும் செய்து வருகிறார்.
ஒரு மகன், ஒரு மகள் சாருபாலாவுக்கு உள்ளனர். இவரது தாத்தா பாஸ்கர தொண்டமான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜரிடம் செயலாளராகவும் இருந்துள்ளார்.
தந்தை சுப்ரமணியன் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளராக இருந்தவர்.
இவரது ஒரு சகோதரரான ராமசுந்தரம் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைச் செயலாளராக இருக்கிறார். இன்னொருவரான சண்முக பாஸ்கர் டாக்டராக சென்னையில் இருக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் சாருபாலா. ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்.
1998ம் ஆண்டு திருச்சியில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது களத்தில் இறங்கி பணியாற்றி மக்களிடம் நற்பெயரைப் பெற்றார்.
புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்.
திருச்சி காங்கிரஸுக்குள் சாருபாலாவுக்கு ஆதரவை விட எதிர்ப்புகளே நிறைய உள்ளன. இருப்பினும் ஜி.கே.வாசனின் செல்வாக்கு மற்றும் ராஜ குடும்பத்துப் பின்னணி ஆகியவற்றை வைத்து எதிர்ப்புகளை திறம்பட சமாளித்து செயலாற்றி வருகிறார் சாருபாலா.
திருச்சி மேயராக நற்பெயர் பெற்றுள்ள சாருபாலாவுக்கு, திருச்சி தொகுதி மக்கள் எம்.பி பதவியை அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications