ஆசிரியை கொடுமை..கோமாவில் போராடி உயிரிழந்த பிஞ்சு

டெல்லி பவானா பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார் கூலித் தொழிலாளியான அயூப்கானின் மகள் ஷன்னோ (வயது 11).
இந்தச் சிறுமி ஆங்கிலப் பாடத்தை சரியாக படிக்கவில்லை என்று கூறி ஆசிரியை மஞ்சு அடித்தார். பின்னர் தலையை டேபிளில் மோதி உதைத்தார். ஆனாலும் ஆத்திரம் தணியாத அந்த ஆசிரியை ஷன்னோவின் தோள்களில் 2 செங்கற்களை வைத்து, பள்ளி மைதானத்தில் 2 மணி நேரம் கடும் வெயிலில் நிற்க வைத்தார்.
செங்கற்களுடன் வெயிலில் 2 மணி நேரத்துக்கு மேல் நின்ற அந்தகப் பிஞ்சு் குழந்தை மாலையில் உடல் தளர்ந்த நிலையில் வீடு திரும்பினார். வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தாள்.
இதையடுத்து குழந்தை மகரிஷி வால்மீகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவள் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
இந்தச் சிறுமி கோமா நிலைக்குச் சென்றார். கடந்த இரு நாட்களாக செயற்கை சுவாசத்தில் இருந்த அந்தச் சிறுமி நேற்று மரணமடைந்தார்.
இந்த சம்பவத்தைடுத்து ஆசிரியை மஞ்சுவும், பள்ளி முதல்வர் தனபதியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கைதாவோம் என்று தெரிந்து மஞ்சு தலைமறைவாகிவிட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று பிற்பகலில் மாணவி ஷன்னோவின் உயிர் பிரிந்தது. 2 நாட்களாக கோமாவில் உயிருக்கு போராடிய அவள் மரணம் அடைந்தாள்.
இந் நிலையில் மஞ்சு, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் தனது சொந்த ஊரில் பதுங்கியிருப்பது தெரிந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications